பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைன் போர்: கெர்சன் பகுதியில் இருந்து வெளியேறும் ரஷியர்கள்!

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். 

News image
Updated On :20 அக்டோபர் 2022, 7:05 am

DIN

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியதுடன், மேற்கத்திய நாடுளின் எதிா்ப்பையும் மீறி அந்த பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது. 

மேலும் ரஷியா தன் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் கைப்பற்றிய பிராந்தியங்களை மீட்க உக்ரைன் கடுமையாகப் போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள ரஷியர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கெர்சன் பகுதி ரஷியர்கள் அதிகமிருக்கும் பகுதி என்பதால் உக்ரைன் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதனால் கெர்சன் பகுதியில் உள்ள சுமார் 60,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது. 

இதனிடையே, ஆக்கிரமிப்புப் பகுதிகளைச் சோ்ந்த தங்கள் ஆதரவு தலைவா்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அந்தப் பிராந்தியங்களில் இன்று (அக். 20) முதல் ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக புதின் அறிவித்துள்ளாா்.

உக்ரைனில் பதற்ற நிலை நிலவுவதால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்தியா்கள் உடனடியாக உக்ரைனைவிட்டு வெளியேறுமாறு கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.