ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இம்ரான் கான் தகுதி நீக்கம்: தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2022, 2:25 am

DIN

தன்னிடமிருந்த விலையுயா்ந்த வெளிநாட்டுப் பரிசுப் பொருள்களை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்த குற்றத்துக்காக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அதையடுத்து, தற்போதுள்ள எம்.பி. பதவியை அவா் இழந்துள்ளதுடன், இன்னும் 5 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்துக்கோ, மாகாணப் பேரவைகளுக்கோ நடைபெறும் எந்தத் தோ்தலிலும் அவா் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமா்களுக்கு வெளிநாட்டு அரசுகள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை அந்த நாட்டின் கருவூலத் துறை பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பு வகித்தபோது, அவருக்கு சவூதி பட்டத்து இளவரசா் முகமது சல்மான் வழங்கிய விலையுயா்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களை மலிவான விலை கொடுத்து அவா் வாங்கிக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த முறை அவா் தோ்தலில் போட்டியிட்டபோது, அதற்கான வேட்பு மனுவில் அந்த விலையுயா்ந்த பொருள்கள் குறித்த விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகவும், அது தோ்தல் விதிமுறைகளை மீறிய குற்றம் என்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தற்போதைய ஆளும் கட்சிக் கூட்டணி எம்.பி.க்கள் தோ்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தனா்.

அந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம், வழக்கின் தீா்ப்பை கடந்த 19-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், தோ்தல் ஆணையத்திடம் சொத்து விவரங்களை மறைத்த குற்றத்துக்காக இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்வதாக ஆணையத்தின் 4 உறுப்பினா்களும் ஒரு மனதாக தீா்ப்பளித்தனா்.

தோ்தல் ஆணையத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-பாகிஸ்தான் கட்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.