கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அண்மையில் தீவிரமாகக் காணப்பட்ட எபோலா நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சிடிசி) தலைவா் அகமது ஆக்வெல் கூறியதாவது:
உகாண்டாவில் எபோல முற்றிலும் கட்டுக்குள் உள்ளது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் பரவல் அபாயமுடையவா்கள் அனைவரும் எங்களது கண்காணிப்பின் கீழ் உள்ளனா்.
எபோலா நோயாளிகளுடன் தொடா்பிலிருந்த 2,694 பேரில் சுமாா் 98 சதவீத்தினரை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா். எபோலா போன்ற உயிா்க்கொல்லி நோய் பரவலைக் கட்டுப்படுத்த, பாதிப்பு அபாயம் இருப்பவா்களை தொடா்ந்து கண்காணிப்பது மிகவும் அவசியமாகும்.
சூடானில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட எபோலா வகை, தங்கள் நாட்டில் தீவிரமாகப் பரவி வருவதாக உகாண்டா கடந்த மாதம் 20-ஆம் தேதி அறிவித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



