மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஒக்லஹோமா தீ விபத்தில் 8 பேர் பலி; கொலையாக இருக்கலாம் என சந்தேகம்

துல்சா அருகே வீடு ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். இது கொலையாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :28 அக்டோபர் 2022, 12:42 pm

ஒக்லஹோமா: துல்சா அருகே வீடு ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். இது கொலையாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின், துல்சாவிலிருந்து  தென்கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒக்லஹோமாவின் புரோக்கன் ஏர்ரோ பகுதியில் இருந்த குடியிருப்பில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் குடியிருப்பில் தீ பற்றியதாகச் செய்திகள் வெளியாகின. இந்த தீ விபத்து நேரிட்டது மற்றும் 8 பேர் பலியானது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் பல்வேறு தகவல்கள் விசாரிக்கப்படவேண்டியிருப்பதால், விசாரணை நிலவரங்களை சொல்ல முடியாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் கூறுகையில், அந்த வீட்டில் எட்டு பேர் வசித்த வந்ததாகவும், இரண்டு பெரியவர்கள், ஆறு சிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அந்த வீட்டின் முன்பு இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், ஒரு பேச்சு மூச்சற்ற பெண்ணை அடையாளம் தெரியாத ஒருவர் வீட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் சிலர் சாட்சியம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.