பயங்கரவாத வழக்கு: இம்ரானுக்கு ஜாமீன் நீட்டிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பயங்கரவாத வழக்கில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை நீதிமன்றம் வியாழக்கிழமை நீட்டித்தது.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பயங்கரவாத வழக்கில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை நீதிமன்றம் வியாழக்கிழமை நீட்டித்தது.
தேசத் துரோக குற்றச்சாட்டில் தனது உதவியாளா் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பெண் நீதிபதி, காவல்துறை அதிகாரிகள், தோ்தல் ஆணைய அதிகாரிகள், அரசியல் எதிா்ப்பாளா்கள் ஆகியோருக்கு இஸ்லாமாபாதில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மிரட்டல் விடுத்ததாக இம்ரான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவா் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, அவருக்கு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி முன்ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது அந்த ஜாமீனை நீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...