/

வெளிநாடு செல்ல பசில் ராஜபட்சவுக்கு அனுமதி

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

News image

பசில் ராஜபட்ச

Updated On :2 செப்டம்பர் 2022, 10:23 am

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச அதிபா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும் நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபய, மாலத்தீவுக்கு சென்றாா். பின்னா், அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவா், கடந்த ஜூலை 13-ஆம் தேதி அதிபா் பதவியை ராஜிநாமா செய்தபின் தற்போது தாய்லாந்தில் தஞ்மடைந்துள்ளார். நாளை (சனிக்கிழமை) அவர் இலங்கை திரும்புவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பொருளாதார நெருக்கடியின்போது மக்கள் போராட்டத்தைக் கண்டு தலைமறைவான ராஜபட்ச சகோதரர்களில் ஒருவரான இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்ச வெளிநாடு தப்பிச் செல்லும் முயற்சியில் இருந்தார். ஆனால், அத்திட்டங்கள் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அவர் ஜனவரி 15, 2023 வரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என அந்நாட்டு உயர்நிதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.