

தெற்கு வியட்நாமில் உள்ள கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
வணிக மையமான ஹோ சி மின் நகருக்கு வடக்கே, பின் டுவாங் மாகாணத்தில் உள்ள துவான் நகரில் செவ்வாய் இரவு 9 மணியளவில்
நான்கு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். 12 மணி நேரப் போராட்டத்திற்கு மேலாக தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளத்திலிருந்து குதித்தபோது சிலர் மூச்சுத் திணறிக் காயமடைந்ததாகவும், மற்றவர்களுக்கு கை கால்கள் உடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வீரர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள ஏணிகளைப் பயன்படுத்தி மற்றவர்களைக் காப்பாற்றினர். இரண்டாவது அல்லது மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.