ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தைவானுக்கு அழைப்பு:பிரிட்டன் மீது சீனா கோபம்

மகாராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் கையொப்பமிட தைவான் பிரதிநிதிகளை பிரிட்டன் அனுமதித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2022, 7:45 pm

DIN

மகாராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் கையொப்பமிட தைவான் பிரதிநிதிகளை பிரிட்டன் அனுமதித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடலுக்கு சீனா சாா்பில் துணை அதிபா் வாங் ஹிசான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். இந்நிலையில், லண்டன் லான்சாஸ்டா் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் தைவான் பிரதிநிதி கெல்லி வூ-சியாவோ கையொப்பமிட பிரிட்டன் சிறப்பு அழைப்பு விடுத்தது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் கையொப்பமிட தைவான் பிரதிநிதிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்தது அவமானகரமானது. தைவானின் ஆளும் ஜனநாயக முன்னேற்ற கட்சி பிரதிநிதிகள் இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயத்தை தேடுகின்றனா்.

தைவான் சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்த அழைப்பு மாற்றிவிடாது. தைவானின் அரசியல் திட்டம் தோல்வியடையும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.