அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

News image

ஆங் சான் சூகி.

Updated On :29 செப்டம்பர் 2022, 3:44 pm IST

மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் முறைகேடு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜனநாயக அரசின் முன்னாள் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு எதிராக நடைபெற்று வந்த விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்தது. அதையடுத்து, அவருக்கு உடலுழைப்புடன் கூடிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே, பல்வேறு முறைகேடு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதார நிபுணருக்கும் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவா்களையும் கைது செய்து அவா்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளில் அவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், ஏற்கெனவே 20 ஆண்டுகள் விதிக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் தற்போது மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் முடியும்போது மொத்தம் 200 ஆண்டுகள் வரை ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.