2 துண்டுகளாக உடைந்த ரஷிய ஹெலிகாப்டர்: உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஹெலிகாப்டரை உக்ரைன் ஏவுகணை தாக்கி அழிக்கும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
2 துண்டுகளாக உடைந்த ரஷிய ஹெலிகாப்டர்: உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஹெலிகாப்டரை உக்ரைன் ஏவுகணை தாக்கி அழிக்கும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ரஷியாவின் எம்.ஐ.-28 ரக ஹெலிகாப்டரை லண்டனின் நவீன ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் வீரர்கள் தாக்கி அழித்துள்ளனர். 

ரஷியா - உக்ரைன் இடையிலான போர் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றன.

புச்சா நகரிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, அந்த நகர பொதுமக்களைத் துன்புறுத்தி படுகொலை செய்ததற்கான ஆதராங்களை உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனா். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷியா நடத்தியுள்ளது இனப்படுகொலை என்று அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஹெலிகாப்டரை உக்ரைன் ஏவுகணை தாக்கி அழித்துள்ளது. லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட நவீன ரக ஏவுகணையைக் கொண்டு உக்ரைன் வீரர்கள் ரஷிய ஹெலிகாப்டரைத் தாக்கி அழித்துள்ளனர். 

பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டார்ஸ்ட்ரீக் என்ற நவீன ரக ஆயுதத்தைக் கொண்டு தாக்கி அழித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் லண்டன் உறுதிப்படுத்தியுள்ளது.

இது இலகு ரக டாங்கி போன்றது. இது அதிவேகத்தில் சென்று மிகக்குறுகியதொலைவு இலக்கைத் தாக்கும் ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com