எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நண்பர் இமானுவல் மேக்ரானுக்கு வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :25 ஏப்ரல் 2022, 6:17 am

DIN

 
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரான்ஸ் நாட்டின் அதிபா் தோ்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.  கடந்த 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில், தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் மரீன் லெபென் உள்ளிட்ட 12 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தோ்தலில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும், மரீன் லெபென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

அந்நாட்டு சட்டப்படி அதிபராக தோ்வு செய்யப்படுபவா் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 10-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரானுக்கும், தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், இமானுவல் மேக்ரான் 57.4 சதவீதம் வாக்குகளைப் பெற்று, தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்தார். 

இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Story image

மோடி வாழ்த்து: இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பிரான்சின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது நண்பர் இமானுவேல் மாக்ரோனுக்கு வாழ்த்துகள்! இந்தியா-பிரான்ஸ் உறவை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக"க் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.