தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை வீசிய சீனா!

தைவான் கடல் பகுதியில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சீனா சோதனை நடத்தியதாக தைவான் தெரிவித்துள்ளது. 
தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை வீசிய சீனா!

தைவான் கடல் பகுதியில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சீனா சோதனை நடத்தியதாக தைவான் தெரிவித்துள்ளது. 

தைவானை தன் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கருதிக்கொண்டு இருக்கும் நிலையில், தைவான் தனி நாடு சுதந்திரம் கோருகிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் பயணம் சென்று வந்துள்ளார். 

இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் கடல் பகுதியில் சீனா இன்று போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. 

தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளுக்கு அருகே மொத்தம் 11 டாங்ஃபெங் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவியுள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் போர் ஒத்திகைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

ரஷியா - உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா - தைவான் போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை போர் ஒத்திகை நடைபெறும் என சீனா அறிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com