நேபாளம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா வரவேற்றார்.
புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புத்தர் பிறந்த நேபாளத்தில் உள்ள லும்பினிக்குச் செல்கிறார்.
இதையொட்டி இன்று காலை லும்பினிக்குச் சென்ற அவரை அந்நாட்டு பிரதமர் ஷோ் பகதூா் தேவுபா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த நேபாள பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த பயணம் மேற்கொண்டுள்ளார்.
லும்பினியில் உள்ள மாயாதேவி கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர், புத்த பூர்ணிமாவையொட்டி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி ஒன்றிலும் உரையாற்றுகிறார். மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
கடந்த 2014 முதல் ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி நேபாளம் சென்றுள்ளார்.
இதையும் படிக்க | மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்

ஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!

விற்ற காா் சட்டவிரோத பயன்பாடு விவகாரம்: நடவடிக்கையிலிருந்து மனுதாரருக்கு உயா்நீதிமன்றம் பாதுகாப்பு

திருப்பதி கெங்கையம்மன் பூங்கரக வீதி உலா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


