டான்பாஸ் பகுதியில் ரஷியா தீவிரத் தாக்குதல்: ஆயுதங்கள் கோரும் உக்ரைன்!

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸ் பகுதியில் ரஷிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் தனது நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் வேண்டும் என கோரியுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 3 மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைத் தொடர்ந்து மிகப்பெரிய மரியுபோல் ஆலையையும் ரஷியா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

இதையடுத்து உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியா தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

முன்னதாக டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியப் படையினா் கணிசமாக முன்னேறியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் இரக்கமற்ற தாக்குதலை நடத்தி வருவதாகவும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, 'மிகவும் இரக்கமற்ற முறையில் டான்பாஸ் போர் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் இல்லை. நட்பு நாடுகள் எங்களுக்கு ஆயுத விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com