அழகியும் அழகியும் ரகசிய திருமணம், குவியும் வாழ்த்துகள்

உலக அழகிகள் இருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்ஸ்டாகிரம்
இன்ஸ்டாகிரம்

உலக அழகிகள் இருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அர்ஜெண்டினாவின் உலக அழகி மரியானா வரேலா மற்றும் பியூர்டோ ரிகோ நாட்டின் உலக அழகி ஃபேபியோலா வேலண்டின் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்து இரண்டு ஆண்டுகளாக இந்த இரு உலக அழகிகளும் தங்களது காதலை வெளி உலகத்திற்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த அழகிகள் தங்களது திருமண முடிவை இன்ஸ்டாகிரம் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

தங்களது திருமணத்தை இன்ஸ்டாகிராம் விடியோ பதிவின் மூலமாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். 

அந்த விடியோவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் எங்களது இந்த உறவை இத்தனை நாட்கள் வெளி உலகுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தோம். இந்த சிறப்பான நாளில் (28/10/2022)  எங்களது உறவு குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

உலக அழகிகளான வரேலா மற்றும் வேலண்டின் 2020ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச உலக அழகிப் போட்டியில் முதல் முறையாக சந்தித்துள்ளனர். அந்த உலக அழகிப் போட்டியில் இரு அழகிகளும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்தனர். உலக அழகிப் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்த இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதல் வயப்பட்ட இருவரும்  வெளி உலகுக்கு தெரியாத வண்ணம் பலமுறை வெளியில் சென்று உலாவுவதை (டேட்டிங்)  முழு நேர வேலையாக செய்து வந்துள்ளனர். இதில், ஆச்சர்யப்படக் கூடிய விஷயம் என்னவென்றால் அவர்கள் தங்களது உறவு குறித்தும், திருமணம் குறித்தும் அறிவிக்கும் முன்பு வரை அவர்களது ரசிகர்களுக்கோ அல்லது வெளி உலகுக்கோ இந்த விஷயம் துளி கூடத் தெரியவில்லை.

இந்த உலக அழகிகள் தங்களது திருமண முடிவை அறிவித்த பிறகு அவர்களுக்கு அவர்களது ரசிகர்கள், உலக அழகிப் போட்டியில் அவர்களோடு பங்கேற்ற சக அழகிகளிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த உலக அழகிகள் இருவருக்கும் 2020ஆம் ஆண்டின் உலக அழகியாக பட்டம் வென்ற கானா நாட்டைச் சேர்ந்த அபேனா அகுவபா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com