நேரலையில் இருந்த செய்தியாளரிடம் கொள்ளை! எப்படித் தெரியுமா?
நேரலையில் இருந்த செய்தியாளரிடம் கொள்ளை! எப்படித் தெரியுமா?

நேரலையில் இருந்த செய்தியாளரிடம் கொள்ளை! காவல் துறை செய்த செயல்!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் ஈக்குடார் அணியின் வெற்றி குறித்து நேரலை செய்துக்கொண்டிருந்தார்.

கத்தாரில் நேரலை செய்துக்கொண்டிருந்த செய்தியாளரிடம், மர்ம நபர் ஒருவர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக புகாரளிக்கச் செல்லும்போது, கொள்ளையரைப் பிடித்தால் அவருக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்பதை செய்தியாளரிடமே காவல் துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு செய்தியாளர் அளித்த பதில் பலரை திகைக்கவைத்துள்ளது. 

தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார் டோமினிக் மெட்ஸ்கர். இவர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியைத் தொகுத்து வழங்கிவருகிறார். 

நேற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் ஈக்குடார் அணியின் வெற்றி குறித்து நேரலை செய்துக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் வந்த கொள்ளையர் ஒருவர், செய்தியாளரின் கைப்பையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். எனினும் நேரலையை முடித்த டோமினிக், உள்ளூர் கத்தார் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

மிகப்பெரும் கலாசார வேறுபாட்டை காவல் நிலையத்தில் உணர்ந்ததாக குறிப்பிட்ட டோமினிக், கொள்ளையரைப் பிடித்தால் அவருக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என காவல் துறையினர் தன்னிடம் கேட்டதாகக் குறிப்பிட்டார். 

கால்பந்து திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், பேஸ்டிடெக்டர் வைத்து கொள்ளையரை விரைவில் பிடித்துவிடுவதாகவும் செய்தியாளரிடம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இது குறித்து பதிலளித்த செய்தியாளர் டோமினிக், கொள்ளையருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதைத் தெரிவிப்பது என் வேலை அல்ல. திருடப்பட்ட என் பையும், அதில் இருந்த என் உடமைகளும் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்ததாகவும் குறிப்பிட்டதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உலகமே எதிர்பார்த்திருந்த கால்பந்துப் போட்டிகள் ஓரிடத்தில் விழாக்கோலமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பது, அதுவும் நேரலையில் இருந்த செய்தியாளரிடம் கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் கத்தார் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாட்டில் கேள்விகளை ஏற்படுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com