உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார்.
ஆப்டிமஸ் என்று பெயரிட்டுள்ள அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளார் டெஸ்லாவின் சி.இ.ஓ. எலான் மஸ்க். அலுவலக வீட்டு வேலைகளை செய்யும் ஆப்டிமஸ் ரோபோவை 20 ஆயிரம் டாலருக்கு (ரூ.16 லட்சத்துக்கு) விற்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஆதரவும், கிரேன்கள், இயந்திர வழிமுறைகள் அல்லது கேபிள்கள் இல்லாமல் வேலை செய்வது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: மகாபஞ்சமி விழாவில் நடமனாடிய மேற்குவங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா!
ரோபோவில் ஒரு மணி நேரத்திற்கு 2.3 கிலோவாட் பேட்டரி பேக் உள்ளது. இது ஒரு நாள் முழுவதும் வேலை செய்வதற்கு ஏற்றது. டெஸ்லா சிப்பில் இயங்குகிறது. மேலும் இது வைஃபை மற்றும் எல்டிஇ இணைப்பைக் கொண்டுள்ளது என்று தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: புடவையை இப்படியா கட்டுவது?: ஸ்ரேயாவின் அதிரடி படங்கள்!
இந்த ரோபோவால் 9 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களை வரை துக்க முடியும் என தகவல் சொல்லப்படுகிறது. இந்த ரோபோவின் நடனமாடும் விடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.
â Tesla (@Tesla) October 1, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










