மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கேட்-ஐ கண்ணாடிகளை வடிவமைத்த அல்டினா ஷினாசி: கௌரவித்த கூகுள்

அமெரிக்க கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் அல்டினா ஷினாசியின் 116 ஆவது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2023, 7:18 am

DIN

அமெரிக்க கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் அல்டினா ஷினாசியின் 116 ஆவது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது சாதனையாளர்களை கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. 

அந்தவகையில் 1940ல் கேட்-ஐ கண்ணாடிகளை வடிவமைத்த அமெரிக்காவின் பிரபல கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் அல்டினா ஷினாசியின் 116 ஆவது பிறந்தநாள் இன்று. 

அல்டினா ஷினாசி

அல்டினா ஷினாசி

1907 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த இவர், வடிவமைப்புகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார், மேலும் ஆவணப்படங்களையும் உருவாக்கியுள்ளார். இத்தாலி, வெனிஸில் அணியக்கூடிய ஹெர்லிகுயின் மாஸ்க்குகளை கண்டறிந்தவர். 

ஆரம்பத்தில் இவரது வடிவமைப்புகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார். 

Story image

1940 களில் இவர் பெண்களுக்காகவே வடிவமைத்த கேட்-ஐ கண்ணாடிகள் அமெரிக்காவில் அப்போது மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை அந்த கண்ணாடிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. 

அல்டினா ஷினாசியின் பிறந்தநாளையொட்டி அவரை கௌரவிக்கும் பொருட்டு கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை இன்று வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.