பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், இம்ரான் கானின் எம்.பி. பதவியும் பறிக்கப்படுகிறது.
பிரதமராக இருந்தபோது பதவியை தவறாகப் பயன்படுத்தி ரூ. 14 கோடி ஊழல் செய்ததாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ. 1 லட்சத்தை கட்டத்தவறினால், மேலும் 6 மாதங்களுக்கு கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

காலையில் எழுந்தவுடன் இதைச் செய்யுங்கள்!

நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

