இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 17,000-த்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றுவரும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிணைக் கைதிகள் உயிருடன் நாடு திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
'ஹமாஸ் அமைப்பு அழிந்து வருகிறது, தீவிரவாதிகள் சரணடைந்து வருகிறார்கள்' என இஸ்ரேல் படைத் தலைவர் தெரிவித்துள்ள நிலையில் ஹமாஸ் அமைப்பிடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ல் ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனில், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்க: ஆப்கானிஸ்தானில் தொடரும் நிலநடுக்கங்கள்!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய இந்த வெற்றிகரமான தாக்குதல் சர்வதேச அளவில் இஸ்ரேலின் மதிப்பை குறைக்கும் விதமாக அமைந்தது. இதனால் ஏற்பட்ட போர் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. 17,000-த்திற்கும் அதிகமான மக்களைக் கொலை செய்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை அழிக்காமல் போரை நிறுத்தப்போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளது.
7 நாள்கள் நடைபெற்ற தற்காலிக போர் நிறுத்தத்தில், 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வங்கதேசத்தில் 24 மணிநேரத்தில் டெங்குவுக்கு 9 பேர் பலி
போரை உடனடியாக நிறுத்துவது தொடர்பான ஐநாவின் தீர்மானத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ள நிலையில், போரை நிறுத்தும் முயற்சியைக் கைவிடப் போவதில்லை என ஐநாவின் பொதுச் செயலளார் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


