சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

3 நாடுகள் இணைந்து உருவாக்கும் புதிய போர் விமானம்!

ஜப்பான், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இணைந்து புதிய ரக போர் விமானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.  

கோப்புப்படம்.

Published On :

ஜப்பான், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து புதிய ரக போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தமிட்டுள்ளனர். சீனா, ரஷியா, வடகொரியா போன்ற நாடுகளால் வலுத்துவரும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாக்க இந்தக் கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 

ஜப்பான் மற்ற நாடுகளுடன் சேர்ந்து இராணுவ உபரகரணங்களை உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து பேசிய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மினாரு கிஷாரா, நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்ய அதிக திறன்கொண்ட  போர் விமானங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாதது எனக் கூறியுள்ளார். ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உருவாகிவரும் இந்த நேரத்தில் இந்த புதிய போர் விமானத்தை உருவாக்குவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார். 

ஒரு நாடு தனியாக ஒரு போர் விமானத்தை உருவாக்க தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் தேவைப்படும். மூன்று நாடுகளும் இணைந்து இந்த போர் விமானத்தை உருவாக்குவது அந்த வகையிலான நெருக்கடிகளை குறைக்கிறது எனவும் கூறியுள்ளார். 

மிட்சுபிஷி எஃப் - எக்ஸ் (Mitsubishi F-X) என அழைக்கப்படும் இந்த ஜெட் விமானத்தின் தயாரிப்பு மூன்று நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் மேற்பார்வையில் நடைபெறும். இதற்கு ஜப்பான் தலைமையேற்றுள்ள நிலையில், தலைமைப் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.