தவறுதலாக இஸ்ரேல் பிணைக் கைதிகளைக் கொன்றுவிட்டோம்!: இஸ்ரேல் ராணுவம்

பிணைக் கைதிகளை மீட்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், 3 தன் நாட்டு கைதிகளைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளது. 
இஸ்ரேல் ராணுவப் படையினர் | AP
இஸ்ரேல் ராணுவப் படையினர் | AP

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்களை இஸ்ரேல் கொன்றுவருகிறது. இந்நிலையில் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளைத் தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
 
தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் எனக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல், காஸாவின் ஷிஜியா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரோடு பயங்கர சண்டையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் திடீரென நுழைந்த 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை தீவிரவாதிகள் என நினைத்து இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்தக் கொலை தவறுதலாக நடந்துவிட்டது என இஸ்ரேல் இராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.    

மேலும், ஹமாஸ் அமைப்பால் பிடித்து வரப்பட்ட இந்தக் கைதிகள் எப்படி அங்கு வந்தார்கள் என உறுதியாகத் தெரியவில்லை, இஸ்ரேல் இராணுவம் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com