மேலுமொரு பாலஸ்தீன பத்திரிகையாளர் கொலை!

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு மேலுமொரு பாலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். 
இஸ்ரேல் ராணுவம் | AP
இஸ்ரேல் ராணுவம் | AP

இஸ்ரேல் நடத்திவரும் பயங்கர தாக்குதலுக்கு மேலுமொரு பாலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் அவரது வீட்டின் மேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர் ஹனீன் அல் கஸ்தானும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். 

போர் துவங்கியதிலிருந்து இதுவரை 95 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடுமைகளை முடக்கும் நோக்கில் உண்மைகளை உலகுக்குத் தெரியவிடாமல் தடுக்க பத்திரிகையாளர்களைth திட்டமிட்டுக் கொல்வதாக செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. 

ஹமாஸ் அமைப்பின் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலளிக்கும் நோக்கில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் இதுவரை மொத்தம் 18,800-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது. பள்ளிகள், வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகளைத் தரைமட்டமாக்கியுள்ளது. ஹமாஸ் அமைப்பு ஒளிந்திருப்பதாகக் காரணம் கூறி பொதுமக்கள் தங்கும் இடங்களிலும் முகாம்களிலும் தாக்குதல்  நடத்தியுள்ளது, 

இஸ்ரேலின் தாக்குதலுக்கு, காஸாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளும் பலியாகின்றனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், சண்டையின் போது தவறுதலாக சொந்த நாட்டு பிணைக் கைதிகளை இஸ்ரேல் கொன்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com