வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஹமாஸின் முக்கிய மையம் கண்டுபிடிப்பு!

ஹமாஸ் போராளி அமைப்பின் முக்கியமான மையத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

News image
ரஃபாவில் இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்கள்.
Updated On :21 டிசம்பர் 2023, 5:47 am

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 20,000-த்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு உலகநாடுகளின் வலியுறுத்தல்கள் வலுத்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கியமான மையத்தைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

இந்தக் கட்டளை மையத்தைக் கண்டுபிடித்தது, இஸ்லாமிய போராளி அமைப்புகளை ஒழித்துக்கட்டுவதில் மிக முக்கியமான படி என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் ராணுவப் பொருள்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளின் மையமாக இது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹமாஸ் அமைப்பினருக்கு மிக முக்கியமான இந்தச் சுரங்கப்பாதைகளை அழிப்பதே நடத்தப்படும் தாக்குதல்களின் முக்கிய நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

ஹமாஸின் முக்கியத் தலைவர் மற்றுமொரு தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி கைதிகளை பரிமாற்றுவதற்கான பேச்சு வார்த்தைகளுக்காக எகிப்திற்கு சென்றுள்ள நிலையில், இஸ்ரேல் போரில் தனக்கு முன்னேற்றம் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க: காஸா போரில் 20,000-ஐ கடந்த உயிரிழப்பு!

இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்காவும் தாக்குதல்களை குறைத்துக் கொள்ளுமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இஸ்லாமியப் போராளி அமைப்புகளை அழிக்காமல் இந்த போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துவந்தது. சண்டையில் சொந்த நாட்டுக் கைதிகளை இஸ்ரேல் கொன்றபின் உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலைப் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.