அகழியில் பாலஸ்தீனர்களின் உடல்கள்... உறைய வைக்கும் படங்கள்!
பலியான பாலஸ்தீனர்களின் உடல்கள் வரிசையாக அடுக்கப்பட்டு புதைக்கப்படவுள்ளன.


போரின் காட்சிகள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வடக்கு காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல், காஸாவின் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.
சிதைந்த மற்றும் முழு உடல் சடலங்கள் ராபா எல்லையில் அடக்கம் செய்யப்படுவதற்காக டிரக்கில் எடுத்து வரப்பட்டுள்ளன.

டிரக்கில் இருந்து உடல்களை இறக்கும் காட்சி | AP
நீண்ட அகழி போல தோண்டப்பட்ட குழியில், நீல நிற பையில் அடைக்கப்பட்ட உடல்கள் அடுக்கப்படும் படங்களை அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 240 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20,915 ஆக உயர்ந்துள்ளது.

புல்டோசரில் கொண்டு வரப்படும் உடல்கள் | AP
இதையும் படிக்க: மேற்குக் கரையில் 6 பாலஸ்தீனர்கள் பலி
நான்காவது முறையாக தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு காஸா பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.

வரிசையாக அடுக்கப்பட்ட உடல்கள் | AP
அக்.7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், வெளிநாட்டவர்கள் பலியாகினர். 240 பேர் ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் 110 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் ஹமாஸின் பிடியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...