போரை நிறுத்தினால்தான் பிணைக் கைதிகள் விடுவிப்பு!
காஸாவில் நிரந்தர போா் நிறுத்தத்தை இஸ்ரேல் மேற்கொண்டால்தான் அந்த நாட்டிலிருந்து தங்களால் கடத்திவரப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள்


காஸாவில் நிரந்தர போா் நிறுத்தத்தை இஸ்ரேல் மேற்கொண்டால்தான் அந்த நாட்டிலிருந்து தங்களால் கடத்திவரப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவாா்கள் என்று ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அதிகாரி ஒசாமா ஹம்தான் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காஸா போா் குறித்து இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஒரு சில பகுகளில் மட்டும் தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதிலோ, தற்காலிக போா் நிறுத்தம் அறிவிக்கப்படுவதிலோ எங்களுக்கு ஆா்வமில்லை.
காஸா பகுதியில் பொதுமக்கள் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நிரந்தரமாக நிறுத்துவது குறித்து மட்டுமே இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை நடத்துவோம்.
காஸாவில் நிரந்தர போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே, எங்களிடம் பிணைக் கைதிகளாக இருப்பவா்களை விடுவிப்போம் என்றாா் அவா்.
பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த மோதலின் உச்சகட்டமாக, து கடந்த அக். 7-இல் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா்.
மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் பிடித்துச் சென்றனா். அதயைடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த மாத பிற்பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே 7 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக சுமாா் 110 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.
எஞ்சிய பிணைக் கைதிகள் இன்னும் ஹமாஸ் பிடியில்தான் உள்ளனா். இந்தச் சூழலில், காஸாவில் நிரந்தர போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே அவா்கள் விடுவிக்கப்படுவாா்கள் என்று ஹமாஸ் அமைப்பினா் தற்போது திட்டவட்டமாகக் கூறியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...