மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

இன்னும் பல மாதங்களுக்கு தாக்குதல்கள் தொடரப்படும்: இஸ்ரேல் பிரதமர்

தொடர் தாக்குதல்கள் மூலம் 21,672 பாலஸ்தீனர்களை கொன்றுகுவித்த இஸ்ரேல் இன்னும் பல மாதங்களுக்கு போர் தொடரும் எனத் தெரிவித்துள்ளது. 

News image

இஸ்ரேல் தாக்குதலுக்கு இரையான தங்கள் வீடுகளைப் பார்வையிடும் காஸா மக்கள்

Updated On :31 டிசம்பர் 2023, 10:18 am

காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்துள்ள இஸ்ரேல், இன்னும் பலமாதங்களுக்கு போரை நிறுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சிக்கலான சண்டையில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த போர் இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும். ஹமாஸ் அமைப்பை அடியோடி அழித்து, பிணைக்கைதிகள் வீடு திரும்பாதவரை இந்த போரை நிறுவத்துவதாக இல்லை' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 

இதுவரை 8,000 போராளிகளைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இஸ்ரேலுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாத இடமாக காஸாவை மாற்றாமல் போர் நிறுத்தம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலளிக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது. இதுவரை 21,672 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. 

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனர்கள் மட்டுமின்றி 3 இஸ்ரேல் பிணைக்கைதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. பிணைக்கைதிகளைப் பாதுகாப்பாக மீட்குமாறு மக்களும், கைதிகளின் உறவினர்களும் தெல் அவிவில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.