பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சூரியனில் ஏற்பட்ட சூறாவளி.. அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ச்சியாளர்களுக்கு எப்போதும் ஜாலம் காட்டி வருவது சூரியன்தான்.

News image
சூரியனில் ஏற்பட்ட சூறாவளி.. அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்
Updated On :11 பிப்ரவரி 2023, 10:48 am

DIN


விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு எப்போதும் ஜாலம் காட்டி வருவது சூரியன்தான். அருகில் நெருங்கவும் முடியாமல், ஆராய்ச்சி செய்யாமல் தவிர்க்கவும் முடியாத பெரிய சக்தியாக விளங்கி வரும் சூரியனில் மிகப்பெரிய பாகம் ஒன்று வெடித்துச் சிதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரியனில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தால், ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்துபோனதாகவும் கூறப்படுகிறது.

சூரியனின் மிகப்பெரிய துண்டு ஒன்று வெடித்து வெளியே சிதறியதாகவும், அது பார்க்க சூறாவளி போல தென்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரியனின் மிகப்பெரிய துண்டு ஒன்று வெடித்து வெளியே சிதறியதாகவும், அது பார்க்க சூறாவளி போல தென்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரியனின் ஒரு பகுதி வெடித்துச் சிதறியது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பல ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சூரியனின் ஒரு பகுதி வெடித்து வட துருவத்தில் சிதறியது. 

நாசாவின் தொலைநோக்கியில் பதிவான விடியோவை டாக்டர் தமிதா ஸ்கோவ் தனது டிவிட்டரில் வெளியிட்டார் அது தற்போது வைரலாகியிருக்கிறது.  வழக்கமாக சூரியனிலிருந்து சூரியத் துண்டுகள் வெடித்துச் சிதறுவது நிகழும்தான். ஆனால், இது மிகப்பெரியதாக இருந்ததும், இதனால் சில நேரங்களில் பூமியின் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெடித்துச் சிதறிய சூரியனின் பெரிய துண்டு வட துருவத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.