30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஆர்மீனிய எல்லைப் பகுதி!

தென் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30 ஆண்டுகளில் முதல் முறையாக துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஆர்மீனிய எல்லைப் பகுதி!

தென் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 30 ஆண்டுகளில் முதல் முறையாக துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்பட்டுள்ளது.

ஆர்மீனியாவுக்கான துருக்கியின் சிறப்புத் தூதர் செர்டார் கிலிக், இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப்பகுதியான துருக்கியப் பகுதியில் உள்ள அலிகன் சோதனைச் சாவடி வழியாக லாரிகள் செல்லும் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.

"துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள எங்கள் மக்களின் துன்பங்களைப் போக்க ஆர்மீனியா மக்கள் அனுப்பிய ஏராளமான உதவியை நான் எப்போதும் நினைவில் கொள்கிறேன்" என்று கிலிக் கூறினார். மேலும் ஆர்மேனிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

1988 இல் நிலநடுக்க்கத்தால் பாதிக்கப்பட்ட ஆர்மீனியாவிற்கு துருக்கிய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து உதவிகளை அனுப்ப கடைசியாக இந்த எல்லைப் பகுதி பயன்படுத்தப்பட்டது.

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com