துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: கூடுதல் உதவிகள் தரத் தயாராகும் ஐ.நா. 

துருக்கியில் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கூடுதல் உதவிகள் தரத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
துருக்கியின் நுா்டாகி நகரில் நிலநடுக்கத்தால் உருக்குலைந்த கட்டடம்.
துருக்கியின் நுா்டாகி நகரில் நிலநடுக்கத்தால் உருக்குலைந்த கட்டடம்.


நியூ யார்க்: துருக்கியில் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கூடுதல் உதவிகள் தரத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், துருக்கி மற்றும் சிரியா மக்களுடனே என் மனம் இருக்கிறது. அங்கு திங்கள்கிழமை மாலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தேவைப்படும் கூடுதல் உதவிகளை செய்துத் தரவும் தயாராக இருப்பதாத் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் திங்கள்கிழமை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அது 6.4 அலகுகளாகப் பதிவானது. இரு வாரங்களுக்கு முன்னா் அதிபயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்த ஹாடாய் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com