
விமான பயிற்சியாளருக்கு, விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட, சக விமானியோ, அவர் பாசாங்கு செய்வதாக நினைத்துக் கொண்டு விமானத்தை தரையிறக்கிய பிறகு, பயிற்சியாளர் சரிந்து தோளில் விழுந்தபோதுதான் அவர் இறந்தவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இங்கிலாந்தில் பிளாக்பூர் விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியான இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானியும், விமான பயிற்சியாளரும் ஒன்றாக விமானத்தில் ஏறியிருக்கிறார்கள். வழக்கம் போல இருவரின் உரையாடலும் இருந்துள்ளது. பயிற்சியாளர் கடைசியாக சிறப்பாக உள்ளது. உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயிற்சியாளர் திடீரென தலையை சாய்த்துள்ளார். சக விமானியோ பயிற்சியாளர் உறங்கிவிட்டார் என்று நினைத்திருக்கிறார். ஒரு சுற்று முடித்துவிட்டு திரும்பும் போது, பயற்சியாளரின் தலை விமானியின் தோள் மீது சரிந்துள்ளது. அப்போதும், பயிற்சியாளர் தன்னிடம் பாசாங்கு செய்கிறார் என்று அதனை நகைச்சுவையாகவே விமானி எடுத்துக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்ட பிறகு, தனது தோளிலிருந்து பயிற்சியாளரின் தலையை தூக்க முயன்றபோதுதான் அவர் உயிரிழந்துவிட்டதை விமானி அறிந்துள்ளார். அப்போது ஏதோ விபரீதம் நடந்திருப்பதாக எண்ணிய விமானி விமான நிலைய அவசரகால சேவை மையத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளார்.
பிறகு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மரணமடைந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
சுமார் 9,000 மணி நேரங்கள் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். காலையில் அனைவரிடமும் முகமலர்ச்சியோடு பேசியிருக்கிறார் என்றே அனைவரும் அவரைப் பற்றி நினைவுகூருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.