மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விரைவில் சீன அதிபருடன் ஸெலென்ஸ்கி சந்திப்பு!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

News image
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி
Updated On :25 பிப்ரவரி 2023, 3:27 am

DIN

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியப் படைகள் போர்த் தொடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த போரை உடனடியாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரஷியாவுக்கு தொடர்ந்து சீனா ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சீன அதிபரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும், எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக உக்ரைனில் இருந்து ரஷியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று ஐ.நா.வில் நேற்று கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.