கலிபோர்னியாவில் குளிர்கால புயல்: 16 பேர் பலி!

அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியாவில் கடுமையான குளிர்கால புயல் வீசியதில் 16 பேர் உயிரிழந்தனர். 
கலிபோர்னியாவில் குளிர்கால புயல்: 16 பேர் பலி!

அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான கலிபோர்னியாவில் கடுமையான குளிர்கால புயல் வீசியதில் 16 பேர் உயிரிழந்தனர். 

கடந்த 2 ஆண்டுகளில் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விடக் குளிர்கால புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் வெளியிட்ட அறிக்கையில், 

குளிர்கால புயல் தொடர்ந்து கடுமையாக வீசி வருகிறது. இது மேலும் சில நாள்கள் நீடிக்கும் என்று  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் அவசரக்கால ஆலோசனையை மேற்கொண்டு வருகின்றனர். 

கலிஃபோர்னியாவில் கனமழையுடன் குளிர்காலப் புயல்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இதனால் வெள்ளம், சாலைகள் மூடல், மின் தடைகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் மக்கள் வெளியேறி வருகின்றன. 

தெற்கு கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். கலிஃபோர்னியாவில் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

கலிபோர்னியாவின் பெரும்பகுதி முழுவதும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com