ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு எதிராக தொடரும் முடிவில்லா துயரங்கள்!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் அங்கு வாழும் மக்கள் அதிக அளவிலான துயரங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் உரிமை, சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு எதிராக தொடரும் முடிவில்லா துயரங்கள்!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது முதல் அங்கு வாழும் மக்கள் அதிக அளவிலான துயரங்களை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் உரிமை, சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின், ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முதலில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர். பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் விரல் வரை மறைத்திருக்கும் வண்ணம் உடையணிய அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்லவும் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் கல்வி நிலையங்களுக்கு பெண்கள் செல்லவும் தடை விதித்தனர். தலிபான்களின் இந்த செயலுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

தலிபான்களின் இந்தக் கட்டுப்பாடுகளால் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை, உணவுத் தட்டுப்பாடு மற்றும் மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு போன்றவை உருவாகியுள்ளன. பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த மனித உரிமைக் குறித்த அமைப்புகள் தங்களது சேவையை நிறுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தான் மக்களில் அதிகமானோருக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் இந்த அமைப்புகள் தங்களது சேவையை நிறுத்துவது ஆப்கன் மக்களை வெகுவாகப் பாதிக்கும்.

ஆப்கானிஸ்தானில் உள்ள 97 சதவிகித மக்கள் வறுமையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அடிப்படை உதவிகள் தேவைப்படுகின்றன. நாட்டில் உள்ள 2 கோடி மக்கள் பசியால் வாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com