"உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா" என்ற திட்டத்தின் கீழ் 96 மணி நேரம் (4 நாள்கள்) சவுதி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரலாம் என்ற புதிய சேவை திட்டத்தை சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபிய விமான நிறுவனமான சவுதியா, விமான டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் அதிகபட்சம் நான்கு நாள்களுக்கு (96 மணிநேரம்) சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உம்ரா, ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியா வருபவர்களுக்கு இந்த புதிய திட்டம் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து சவுதியாவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சவுதி ஏர்லைன்ஸில் பயணிகள் ஆன்லைனில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, அவர்களுக்கு விசா தேவையா இல்லையா என்று கேட்கப்படும். விசா தேவைப்படுபவர்கள் ஆம் என்று குறிப்பிட்டால் போதும் விமான டிக்கெட்டுடன் விசாவும் சேர்ந்து வந்துவிடும்.
"உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா" என்ற திட்டத்தின் புதிய வகை விசாவைப் பயன்படுத்தி ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நீங்கள் இறங்கலாம். பயணங்களை முடித்துக்கொண்டு உங்களுக்கு வசதியான விமான நிலையத்தில் இருந்து தாயகம் திரும்பலாம்.
டிக்கெட் வாங்கும்போது வேறு கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்

காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்

எல்&டி 4வது காலாண்டு லாபம் 3% சரிவு!

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


