பசுமை இல்ல விளைவைக் கண்டறிந்த யூனிஸ் நியூட்டனின் பிறந்தநாள்: கௌரவித்த கூகுள்!

அமெரிக்க விஞ்ஞானி யூனிஸ் நியூட்டன் ஃபுட்டின் 204 வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 
பசுமை இல்ல விளைவைக் கண்டறிந்த யூனிஸ் நியூட்டனின் பிறந்தநாள்: கௌரவித்த கூகுள்!
Published on
Updated on
1 min read

அமெரிக்க விஞ்ஞானி யூனிஸ் நியூட்டன் ஃபுட்டின் 204 வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது. 

அந்தவகையில் பசுமை இல்ல விளைவு மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து முதல்முதலில் அறிந்த அமெரிக்க விஞ்ஞானி யூனிஸ் நியூட்டன் ஃபுட்டின் 204 வது பிறந்தநாள் இன்று. அவர் 1819, ஜூலை 17ல் கனெக்டிகட்டில் பிறந்தார். 

யூனிஸ் நியூட்டனுக்கு அறிவியலில் சாதனை புரிந்த அதே நேரத்தில், மறுபக்கம் பெண்களின் உரிமைக்காக போராடி வந்தார். 1848 ஆம் ஆண்டில், செனிகா நீர்வீழ்ச்சியில் நடந்த முதல் பெண் உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டார். 

வறண்ட காற்று, கார்பன்-டை-ஆக்ஸைடு என வெவ்வேறு கண்ணாடி குழாய்களில் நிரப்பப்பட்டு அவற்றில் பாதரச வெப்பமானிகளை பொருத்தி சூரிய ஒளியில் வைத்ததன் விளைவாக, கார்பன்-டை-ஆக்சைடு வெப்பமயமாதலை கண்டுபிடித்தார். தற்போது பசுமை இல்ல விளைவு எனப்படும் கார்பன்-டை-ஆக்சைடு அளவுகளுக்கும் வளிமண்டலத்தின் வெப்பமயமாதலுக்கும் இடையே உள்ள தொடர்பை முதலில் கண்டறிந்தவர் யூனிஸ் நியூட்டன்.

யூனிஸ் நியூட்டனின் பிறந்தநாளையொட்டி அவரை கௌரவிக்கும் பொருட்டு கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com