பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்ததில் 14 பேர் பலி
பாகிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் 14 பேர் பலியானார்கள்.


பாகிஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் 14 பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று இஸ்லாமாபாத்தில் இருந்து பஞ்சாபின் மாகாணத் தலைநகரான லாகூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது சக்வால் மாவட்டத்தில் உள்ள கல்லார் கஹார் பகுதிக்கு அருகே நெடுஞ்சாலையில் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களில் பல பயணிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட அவர் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...