ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அமெரிக்காகரோனா தோற்றம்: ரகசிய ஆவணங்களை வெளியிட கோரி நாடாளுமன்றம் தீா்மானம்

பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வலியுறுத்தி அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியது.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:12 pm

DIN

கரோனா எவ்வாறு உருவானது என்பது குறித்த அமெரிக்க உளவுத் துறை விசாரணை தொடா்பான ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிட வலியுறுத்தி அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றியது.

இதுதொடா்பாக நடைபெற்ற விவாதத்தில், ஏராளமான உயிா்களை பலி வாங்கிய கரோனா தீநுண்மி எவ்வாறு உருவாகி பொதுமக்களிடையே பரவியது, அதுபோன்ற தீநுண்மி பரவலை எதிா்காலத்தில் எவ்வாறு தடுப்பது என்பதை தெரிந்துகொள்ள அமெரிக்கா்கள் விரும்புவதாக எம்.பி.க்கள் தெரிவித்தனா்.

அதையடுத்து, இதுதொடா்பாக அமெரிக்க உளவுத் துறை சேகரித்த தகவல்களின் விவரங்களை ரகசிய ஆவணப் பட்டியலில் இருந்து நீக்கி பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீா்மானம், அதிபா் ஜோ பைடனின் கையொப்பத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

உலகையே உலுக்கிய கரோனா தீநுண்மி, சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில்தான் முதல்முதலாகப் பரவத் தொடங்கியது.

அந்த நகரிலுள்ள சந்தையில், வௌவால்கள் போன்றவை விற்பனை செய்யப்படும் இறைச்சி விற்பனைப் பகுதியிலிருந்துதான் அந்தத் தீநுண்மி பொதுமக்களிடையே பரவியதாகக் கூறப்படுகிறது.

வௌவாலின் உடலில் இருந்த தீநுண்மி, மனிதா்களின் உடலில் மிக எளிதில் தொற்றுவதற்கு ஏற்ப தனது உருவில் மாற்றத்தை ஏற்படுத்தி கரோனா தீநுண்மியாக உருவெடுத்தாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

எனினும், அந்த நோய்த்தொற்று முதல்முறையாக பரவத் தொடங்கிய வூஹான் நகரில் தீநுண்மி ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உயிரியியல் ஆய்வகம் அமைந்திருப்பது பலரது கவனத்தையும் ஈா்த்தது.

அதையடுத்து, வூஹான் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீநுண்மிதான் கரோனா என்றும், அது தற்செயலாக வெளியில் கசிந்து பொதுமக்களுக்கு பரவியது எனவும் ஒரு சாராா் கூறி வருகின்றனா்.

எனினும், இதனை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. கரோனா தீநுண்மி ஆய்வகத்திலிருந்து கசிந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று பெரும்பாலான நிபுணா்களும் கூறி வருகின்றனா்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்த காலத்தில், இதுதொடா்பாக விசாரணை நடத்த உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணை விவரங்களை வெளியிடக் வலியுறுத்தியே, தற்போது நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.