அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கலிபோர்னியாவில் குளிர்கால புயலுக்கு 13 பேர் பலி! 

அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான குளிர்கால புயலுக்கு இதுவரை  13 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :11 மார்ச் 2023, 5:13 am

DIN

அமெரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான குளிர்கால புயலுக்கு இதுவரை  13 பேர் உயிரிழந்தனர். 

கடந்த 2 ஆண்டுகளில் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விடக் குளிர்கால புயலுக்குப் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

இதுகுறித்து கலிபோர்னியா அதிகாரப்பூர்வ அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 8 வரை 13 குளிர்கால புயலுக்கு 13 பேர் இறந்துள்ளனர். தொடர்ச்சியாக அப்பகுதிகளில் பனிப்புயல்கள் தாக்கி வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று மீட்டர் அளவுக்கு ஆழமான பனி மலைப் பகுதிகளையும், சாலைகளையும் சூழ்ந்துள்ளது. 

மக்களுக்கு நாளுக்கு நாள் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் விநியோகம் குறைந்து வருகின்றது. மின்சாரம் இல்லாமலும் தவித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் மார்ச் 1 அன்று அப்பகுதியில் அவசரக்கால நிலையை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.