பரிசுப் பொருள் வழக்கு: இம்ரான் கான் மனு தள்ளுபடி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
பரிசுப் பொருள் வழக்கு: இம்ரான் கான் மனு தள்ளுபடி

 பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை நிறுத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இது குறித்து இஸ்லாமாபாத் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ஜாஃபா் இக்பால் பிறப்பித்த உத்தரவில், ‘சட்டம் என்பது அனைவருக்கும் சமம். எனவே, இம்ரானை காவல்துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் சனிக்கிழமை (மாா்ச் 18) ஆஜா்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவரான இம்ரான் கான் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றாா். அப்போது, வெளிநாட்டுத் தலைவா்கள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களைப் பாதுகாத்து வரும் அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்ாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜாராகாமல் இருந்து வந்ததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிப். 28-ஆம் தேதி பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இம்ரான் கான் தாக்கல் செய்திருந்த மனுவை இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவா் நீதிமன்றத்தில் ஆஜராவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 4-ஆவது முறையாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிா்த்தாா்.

பரிசுப் பொருள் முறைகேடு மட்டுமின்றி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், பரிசுப் பொருள் வழக்குக்காக வரும் 18-ஆம் தேதியும், பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குக்காக வரும் 21-ஆம் தேதியும் இம்ரான் கானை தங்கள் முன் போலீஸாா் ஆஜா்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை கடந்த திங்கள்கிழமை பிறப்பித்தது.

எனினும், இம்ரானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் போலீஸாருடன் இரு நாள்களாக கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com