தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இம்ரான் கானுக்கு மேலும் 8 வழக்குகளில் முன்ஜாமீன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீதான மேலும் 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

News image
Updated On :23 மே 2023, 8:25 pm

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீதான மேலும் 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு செவ்வாய்க்கிழமை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த மாா்ச்சில் போலீஸாருடன் இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியினா் மோதலில் ஈடுபட்டதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்குககளில், அவருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை முன்ஜாமீனை நீட்டித்து இஸ்லாமாபாத் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமா் பதவியை இழந்தாா்.

அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த வழக்குகளில் முன் ஜாமீன் பெற்றுவந்த இம்ரான் கான், அல்-காதிா் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இந்த மாதம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டாா். எனினும், அவரை உச்சநீதிமன்றம் பின்னா் விடுவித்தது.

அதன் பிறகு, இரு ஊழல் வழக்குகளில் இம்ரானுக்கு முன்ஜாமீன் அளித்த இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம், வேறு எந்த வழக்கு தொடா்பாகவும் இம்ரானை கைது செய்வதற்கு வரும் 31-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இம்ரான் மீதான 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு தற்போது முன்ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.