தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

காஸா மீது தாக்குதல்: இஸ்ரேல் உறவைத் துண்டித்தது பொலிவியா!

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் மூன்று வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. 

Published On :

காஸா மீதான தொடர் தாக்குதல் காரணமாக இஸ்ரேல் உடனான அரசு முறை உறவைத் துண்டித்துக்கொள்வதாக தென்அமெரிக்க நாடான பொலிவியா அறிவித்துள்ளது. 

இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நியாயமற்ற ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுப்பதாக பொலிவியா தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் மூன்று வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. 

அக்டோபர் 7ஆம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, போர் அறிவித்த இஸ்ரேல், இரண்டாவது கட்டமாக காஸாவுக்குள் புகுந்து தரைவழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காஸாவில் மட்டும் 8,300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் - பெண்கள் - முதியவர்கள்.

இந்நிலையில், இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை காரணமாக அந்நாட்டுடனான உறவை பொலிவியா அரசு துண்டித்துள்ளது. காஸாவின் ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் நியாயமற்ற ராணுவ நடவடிக்கைகள் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொவிலியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் போர் நிறுத்தம் அறிவிக்கும்வரை இஸ்ரேலுடன் எந்த உறவும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

காஸா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலம்பியா, சிலி ஆகிய நாடுகளும் இஸ்ரேல் நாட்டுக்கான தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.