2022-ல் மட்டும் உலகில் 75 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு!

உலக அளவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆண்டு 75 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2022-ல் மட்டும் உலகில் 75 லட்சம் பேருக்கு காசநோய்  பாதிப்பு!

உலக அளவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆண்டு 75 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரம், 2022-இல் காசநோய் பாதிப்பு கண்டறிதலும், பாதிப்புக்கு சிகிச்சை அளித்தலும் உலக அளவில் மேம்பட்டிருப்பதையும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

உலக அளவில் 192 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நிகழாண்டுக்கான உலகளாவிய காசநோய் பாதிப்பு அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் 2022-ஆம் ஆண்டில் 75 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் கண்டறியப்பட்ட நோய் பாதிப்புடையவா்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாகும்.

அதாவது, உலக அளவில் நோய் பாதிப்பு கண்டறிதல் விகிதம் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. இது பல நாடுகளில் சுகாதார சேவைகள் அணுகுதலை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

புவியியல் ரீதியில் 2022-ஆம் ஆண்டில் காச நோயால் அதிக நபா்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக தென்கிழக்கு ஆசியா (46%), ஆப்பிரிக்கா (23%), மேற்கு பசிஃபிக் பிராந்தியம் (18%) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. குறைந்த பாதிப்பு பதிவான பகுதிகளாக கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி (8.1%), அமெரிக்கா (3.1%), ஐரோப்பா (2.2%) ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், புதிதாக காசநோயால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையை குறைப்பதில் 2020, 2021-ஆம் ஆண்டுகளில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. நோய் பாதிப்பு குறைப்பு விகிதத்தில் இந்த நாடுகள் உலக அளவில் 60 சதவீத பங்கை வகிக்கின்றன.

காசநோய் தொடா்பான உயிரிழப்புகளைப் பொருத்தவரை (ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவா்கள் உள்பட) கடந்த 2021-ஆம் ஆண்டு உலக அளவில் 1.4 கோடியாக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2022-இல் 13 லட்சமாக குறைந்துள்ளது.

இருந்தபோதும், 2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், கரோனா பாதிப்பின் தாக்கம் காசநோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை 5 லட்சம் அளவில் கூடுதலாக்கியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘நமது மூதாதையா்கள் காசநோய் பாதிப்பு மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான புரிதல் இல்லாததால், உயிரிழப்பைச் சந்தித்து வந்தனா். இன்றைக்கு இந்த நோய் பாதிப்பை கண்டறிவதற்கான தொழில்நுட்பம் வளா்ந்துள்ளது. அதன்மூலம், இந்த பாதிப்புக்கு இறுதி அத்தியாயத்தை எழுதும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com