ஜி ஜின்பிங் ஒரு சர்வதிகாரி : ஜோ பைடன்

அமெரிக்கா- சீனா நாடுகளின் அதிபர்கள் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்ட நிகழ்வுக்குப் பிறகு இந்தக் கருத்தை அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வுட்சைட், கலிபோர்னியா: அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஒருமுறை சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கைச் சர்வதிகாரி எனக் குறிப்பிடுள்ளார்..

இரு நாடுகளிடையே நீடித்து வந்த இறுக்கமான சூழல் மாறி இணக்கமான உறவு ஏற்பட சான் பிரான்சிஸ்கோவில் இரு தலைவர்களிடையேயும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆசியா- பசுபிக் பொருளாதார கூட்டமைப்பின் (அபெக்) மாநாடு நடக்கும் வேளையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

நான்கு மணிநேரம் நீடித்த சந்திப்புக்குப் பிறகு, “அவர் ஒரு சர்வதிகாரி” என பைடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ஆண்டின் மே மாதத்தில் இதே போல அவர் குறித்து பேசிய கருத்து பெரிய விவாதத்தை இரு நாடுகளிடையே ஏற்படுத்தியது.

“நான் சொல்ல வருவது, நம் அரசிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அரசை ஒரு கம்யூனிச நாட்டை அவர் நடத்தி வருகிறார் என்பதைத் தான். எப்படியிருப்பினும் நாம் இணக்கமான உறவில் முன்னேறி வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

நவ.2022 இந்தோனேசியாவில் நடந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்திப்பு இது.

2023, பிப்ரவரியில் சீனாவின் உளவு பலூனை அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு தள்ளிய விவகாரத்தில் ஜோ பைடன் பேசும்போது, ஜி ஜின்பிங்கைச் சர்வதிகாரி எனக் குறிப்பிட்டார்.

இதனை சீன அதிகாரிகள், அபத்தமான மற்றும் தூண்டும் விதமான பேச்சு எனக் குறிப்பிட்டனர்.

சீனா- அமெரிக்கா இடையில் நிலவி வந்த வணிகம், பொருளியல் மற்றும் அரசியல் சூழலில் இணக்கம் ஏற்படும் என நம்பப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், பைடன் இப்படி தெரிவித்தது எதிர்மறையாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com