42 பாலஸ்தீனக் கைதிகளுக்கு ஈடாக 14 இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்!

42 பாலஸ்தீனக் கைதிகளுக்கு ஈடாக 14 இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கிறது ஹமாஸ்!

தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இரண்டாம் கட்டமாக, 14 கைதிகளை ஹமாஸும் 42 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேலும் விடுவிக்கின்றன. 

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு தரப்புகளும் கைதிகளை பரஸ்பரம் விடுவித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த கட்டமாக 14 இஸ்ரேல் கைதிகளுக்கு ஈடாக 42 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்புகளுக்குமிடையே மத்தியஸ்தர்களாக செயல்படும் எகிப்தும் கத்தாரும், ஹமாஸ் கொடுத்த பிணைக்கதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இரண்டாம் நாளான சனிக்கிழமையில் இரண்டாம் கட்டப் பிணைக்கைதிகள் பறிமாற்றம் நடைபெறவிருக்கிறது.

கடந்த அக்.7ம் தேதியன்று ஹமாசால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் இந்தப்போர் துவங்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு மேலாக இஸ்ரேலால் நடத்தப்பட்ட இரக்கமற்றத் தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு இரண்டு நாள்கள் ஆகிறது.

ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 240 பிணைக்கைதிகளில் 24 பேரை விடுதலை செய்துள்ள நிலையில், அதற்கு ஈடாக இஸ்ரேல் 39 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com