டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தம்பதி 2 குழந்தைகளுடன் மா்ம மரணம்

நியூஜெர்சியில் வீடு ஒன்றில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 

News image
கோப்புப் படம்
Updated On :6 அக்டோபர் 2023, 6:35 pm

DIN

அமெரிக்காவின் நியூஜொ்சியில் இந்திய வம்சாவளி தம்பதியினா், இரு குழந்தைகளுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். இதை கொலை வழக்காக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேஜ் பிரதாப் சிங் (43), சோனல் பரிஹாா் (42) அவா்களின் 10 வயது மகன், 6 வயது மகள் ஆகியோா் அவா்களது வீட்டில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கொலை வழக்காக இதைப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், இந்தச் சம்பவத்தால் பொது மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் பிளெய்ன்ஸ்பரோ காவல் நிலைய போலீஸாா் தெரிவித்தனா்.

தேஜ் பிரதாப் சிங்கும், சோனல் பரிஹாரும் தனியாா் நிறுவனங்களில் பொறியாளா்களாக பணியாற்றி வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு பிளைன்ஸ்போரோ பகுதியில் அவா்கள் சொந்த வீட்டை வாங்கி வசித்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.