புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 அக்டோபர் 2023, 12:33 pm IST

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

எக்ஸ் தளத்தில் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9.26 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

ஏற்கனவே நிலநடுக்க பாதிப்பால் 4,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஹெராத் நகருக்கு வடமேற்கில் 40 கி.மீ. தொலைவில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகள் எனப் பதிவான அந்த நிலநடுக்கத்தால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. 

அதைத் தொடர்ந்து அக்டோபர் 11-ஆம் தேதி 6.1 என்ற ரிக்டர் அளவிலும், அக்டோபர் 13-ஆம் தேதி 4.6 ரிக்டர் அளவிலும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டன. 

தொடர் நிலநடுக்க பாதிப்புகளால் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மட்டுமின்றி 10,000-த்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.