டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அமெரிக்காவில் 6 வயது பாலஸ்தீன சிறுவன் குத்திக் கொலை! மத வெறுப்பால் 26 முறை குத்தப்பட்டார்

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 6 வயது பாலஸ்தீனிய சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :16 அக்டோபர் 2023, 10:11 am

DIN

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 6 வயது பாலஸ்தீன சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் சிகாகோவிற்கு அருகிலுள்ள ப்ளைன்ஃபீல்டில் பாலஸ்தீன-அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டில் நுழைந்த நில உரிமையாளரான 71 வயது முதியவர் ஜோசப் ஸூபா என்பவர், தான் வைத்திருந்த கத்தியைக் கொண்டு பெண் மற்றும் அவரது மகன் மீதும் சரமாரியாக குத்தியுள்ளார். உடனே இதுகுறித்து அந்த பெண், வில் கவுன்ட்டி காவல் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். 

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அந்த பெண் மற்றும் சிறுவனுக்கு பல்வேறு இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பதைக் கண்டனர். உடனடியாக பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் சிறுவன் பலியானான். இறந்த சிறுவனுக்கு 26 இடங்களில் கத்திக்குத்து காயம் இருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர் ஜோசப் ஸூபா என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கத்தியானது 31 செ.மீ. நீளம் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹமாஸ், இஸ்ரேல் இடையே தற்போது நிலவி வரும் மோதல் எதிரொலி காரணமாகவே அவர்கள் குறிவைக்கப்பட்டதாக வில் கவுன்ட்டி காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கொடூரமான வெறுப்பு செயலுக்கு அமெரிக்காவில் இடமில்லை. அமெரிக்கர்களாகிய நாம் ஒன்று கூடி இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அனைத்து வகையான மதவெறி மற்றும் வெறுப்பையும் நிராகரிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.