இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை: லெபனான் அமைச்சர்

இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை என லெபனான் அமைச்சர் ஜியோத் மக்காரி தெரிவித்துள்ளார். 
இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை: லெபனான் அமைச்சர்

இஸ்ரேலுடன் போரை விரும்பவில்லை என லெபனான் அமைச்சர் ஜியோத் மக்காரி தெரிவித்துள்ளார். 

ரஷிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது: ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் போரிட நினைத்தால், அது 2-வது லெபனான் போராக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் எச்சரித்திருந்தார். இஸ்ரேல் ஒருபோதும் அச்சுறுத்தல்களை குறைக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் இஸ்ரேல் அரசியல் தலைவர்களோ, ராணுவ அதிகாரிகளோ லெபனானை அச்சுறுத்துகின்றனர். இஸ்ரேலுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக நெதன்யாகு போரை விரும்புகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com