எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காஸாவில் பல மணி நேர தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் படைகள்

வடக்கு காஸா பகுதிகளில், இஸ்ரேல் படைகள் பல மணி நேர தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டன.

News image
தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் படைகள்
Updated On :26 அக்டோபர் 2023, 12:09 pm

DIN


ரஃபாஹ்: வடக்கு காஸா பகுதிகளில், இஸ்ரேல் படைகள் பல மணி நேர தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டன. தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துத் தகர்க்குமாறு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் அக்டோபர் 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், காஸா பகுதியை முற்றுகையிட்டு இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அன்று முதல் இஸ்ரேல் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6,500-ஐக் கடந்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. 

இரண்டு வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியில் தரைப்பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் படைகள் தயாராக இருக்கிறது.

இஸ்ரேல் படையின் தரைவழித்தாக்குதலானது, காஸா பகுதியில் எரிபொருள் தீர்ந்துபோகும் தருவாயில் இருப்பதாக ஐ.நா எச்சரித்திருந்த நிலையில் நடத்தப்பட்டுள்ளது. இதனால், காஸா பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை பெரிய அளவில் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையேயான மோதலில், காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. அதேவேளையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டும் வகையில், காஸா பகுதிக்குள் தீவிர தரைவழித் தாக்குதலை நடத்தினால், மிகப்பெரிய அளவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. 

காஸா பகுதியில் கடந்த 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் படையினா் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7000-ஐக் கடந்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 750 பேர் காஸா பகுதியில் கொல்லப்பட்டிருப்பதாகவும், இது அதற்கு முந்தைய நாள் பலியான 704 ஐ விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.